சேலத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.

261

சேலத்தில் நடைபெற்ற திருநங்கைகளுக்கான அழகிப் போட்டியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
சேலத்தில் திருநங்கைகள் நலச்சங்கம் சார்பில் இந்த அழகிப் போட்டி நடத்தப்பட்டது. நேரு கலையரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் உடல் அளவு, நடை,உடை, ஒப்பனை என பல்வேறு சுற்றுகளாக போட்டி நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற 14 திருநங்கைகள் மேடையில் ஒய்யார நடை வந்து அனைவரையும் கவர்ந்தனர். இதில் நடிகை கௌசல்யா நடுவராக பங்கேற்று தேர்வு செய்தார். இறுதியில் பொது அறிவு பிரிவில் தேர்வு செய்யப்பட்ட 3 பேரில், காத்ரினா என்பவர் மிஸ் சேலமாக அறிவிக்கப்பட்டார்.
இரண்டாம் இடத்தை சங்கவியும்,3 ஆம் இடத்தை பிரகதி என்ற திருநங்கையும் பெற்றுக்கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.