ஜல்லிக்கட்டு தொடர்பான, தமிழக அரசின் அவசர சட்டம் சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் உறுதி செய்யவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

125

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் நடத்திவரும் அமைதிவழிப் போராட்டத்தின் விளைவாக, ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அவசர சட்டத்தைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளதாக கூறியுள்ளார்.

உச்சநீதிமன்றம் இந்த அவசர சட்டத்தையும் ரத்து செய்துவிடாதபடி பார்த்துக்கொள்ள வேண்டியது மத்திய அரசின் பொறுப்பு என்று திருமா வளவன் தெரிவித்துள்ளார்.

தமிழக அரசே ஜல்லிக்கட்டைப் பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ள அவர்,

சாதி, மத அடையாளங்களுக்கு அப்பாற்பட்டது ஜல்லிக்கட்டு என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

சூதாட்டம் எனக் குற்றம் சாட்டுவதற்கு வழிவகுக்கும், போட்டி, பந்தயத்தொகை நிர்ணயம் போன்றவற்றிற்கு இடமில்லாத நிலையை ஜல்லிக்கட்டில் உருவாக்கிட வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.