முதல்வர் பழனிசாமியையும், நடிகர் ரஜினிகாந்தையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் இயக்குகிறது- தொல்.திருமாவளவன்!

523

முதல்வர் பழனிசாமியையும், நடிகர் ரஜினிகாந்தையும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தான் இயக்குவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் நடைபெறும் உலக நாத்திகர்கள் மாநாட்டில் பேசிய அவர், அனைத்து தடைகளையும் தகர்த்து வெற்றி பெறும் திறமை நாத்திகர்களிடம் இருப்பதாகவும், உலகின் தலைசிறந்த கொள்கை மனித நேயம் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஆன்மிக அரசியலை முன்னெடுக்க போவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் மதவாதத்தின் இன்னொரு முகம் என சாடினார். தமிழக முதல்வர் பழனிசாமி, பாமக நிறுவனர் ராமதாஸ், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட பலரை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தான் இயக்குவதாக குற்றம் சாட்டினார்.