தமிழகத்தில் சீதலமடைந்து காணப்படும் அரசு கட்டிடங்களை சீரமைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும்-தொல்.திருமாவளவன்!

195

தமிழகத்தில் சீதலமடைந்து காணப்படும் அரசு கட்டிடங்களை சீரமைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாகை பொறையார் பேருந்து பணிமனை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அரசு 25 லட்சம் ரூபாய் நிதியுதவி அளிக்க வேண்டும் எனவும், கட்டிட விபத்திற்கான காரணம் குறித்து ஆராய குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
தமிழகத்தில் சிதலமடைந்த பள்ளிகள், அரசு கட்டிடங்களை சீரமைத்து விபத்து ஏற்படாமல் தடுக்க வேண்டும் என அரசுக்கு திருமாவளவன் வேண்டுக்கோள் விடுத்தார். சாதி மறுப்பு திருமணம் செய்யும் தம்பதிகளுக்கு ஊக்கத்தொகை வழங்க உத்தரவிட்ட கேரள முதல்வர் பிரனாய் விஜயனுக்கு பாராட்டு தெரிவித்து கொள்வதாக அவர் தெரிவித்தார்.