தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

227

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன், அஷோக் நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை சந்தித்து பேசினார். ஜனவரி 5 ஆம் தேதி நடைபெறும் விவசாயிகளின் போராட்டம் குறித்து அவர் எடுத்துக் கூறினார்.
பின்னர் செய்திளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன் தமிழக விவசாயிகளின் பிரச்சனையில் தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதனையடுத்து பேசிய திருமாவளவன், தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க வேண்டும் எனவும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.