வருமானவரித்துறை சோதனை குறித்து மாநில அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என திருமாவளவன் வலியுறுத்தல்.

145

தமிழக முன்னாள் தலைமை செயலாளர் ராமமோகனராவ் வீட்டில் நடைபெற்ற வருமானவரித்துறை சோதனை குறித்து அரசு விளக்கம் அளிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு நிறைவு விழாவில் கலந்துக்கொள்ள கோவை சென்ற அவர், அங்கு செய்தியாளர்களிடம் பேசியபோது, இதனை தெரிவித்தார். வருமானவரித்துறை ஆய்வு மூலம், மத்திய அரசு, மாநில அரசின் மீது ஆதிக்கம் செலுத்த முயற்சிக்கிறதா? என்பதை இரு அரசுகளும் விளக்க வேண்டும் என்றும் திருமாவளவன் கேட்டுக்கொண்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுகவிற்கு இன்னும் 4 ஆண்டு ஆட்சிக்காலம் உள்ளதை குறிப்பிட்ட அவர், முதலமைச்சரையும், கட்சிக்கான பொதுச்செயலாளரையும் தேர்ந்தெடுக்கும் அதிகாரம் அக்கட்சிக்கு உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.