தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் முதல்வராக முடியவில்லை – திருமாவளவன்

188

பெரியார் பிறக்காத உத்தரபிரதேச மண்ணில் மாயாவதி முதல்வராகும் போது, தமிழகத்தில் தாழ்த்தப்பட்டோர் முதல்வராக முடியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்தார்.

லோக் ஜனசக்தி கட்சியின் தேசிய துணை தலைவர் சந்திரகேசன் அவர்களின் 90 வது பிறந்தநாள் விழா தி நகரில் நடைபெற்றது. இதில், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய திருமாவளவன், ஆயிரமாயிரம் ஆண்டுகளாக சிதறிக்கிடந்த மக்களை அம்பேத்கர் ஒன்று திரட்டியதாக கூறினார். தற்போது மக்களை சிதறடிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், இந்தியாவில் வன்கொடுமை தடுப்பு சட்டம் வலுவிழக்கும் நிலையில் உள்ளது என்றார். பெரியார் பிறக்காத உத்தரபிரதேச மண்ணில் மாயாவதி முதல்வராகும் போது, தமிழகத்தில் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் முதல்வராக முடியவில்லை என அவர் வேதனை தெரிவித்தார்.