thiruma

தமிழக அரசை ரிமோட் மூலம் மத்திய அரசு கட்டுப்படுத்துவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் விமர்சித்துள்ளார்..

புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை-சேலம் 8 வழிச்சாலை திட்டத்தை அடக்குமுறையால் தமிழக அரசு செயல்படுத்துவதாக குற்றம்சாட்டினார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நீதிமன்றத்தின் மூலம் மீண்டும் செயல்படுத்த முயற்சி நடைபெற்று வருவதாக சுட்டிக் காட்டிய திருமாவளவன், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் தமிழக அரசை ரிமோட் மூலம் மத்திய அரசு கட்டுப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.