திருமலை ஏழுமலையான் கோவில் பிரமோற்சவம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

924

திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரமோற்சவத்தின் 6-ம் நாள் நிகழ்ச்சியில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி விமரிசையாக நடைபெற்று வருகிறது. விழாவின் 6 -ம் நாள் நிகழ்ச்சியில், காலை உற்சவை மலையப்ப சாமியின் ஹனுமந்த வாகனத்தில் எழுந்தருளி, மாட வீதிகளில் வலம் வந்தார். விசேஷ திருவாபரண அலங்காரத்துடன் எழுந்தருளிய பெருமாளை பக்தர்கள் சேவித்தனர்.