உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதி குடும்பத்துடன் சாமி தரிசனம்..!

100

உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதி ஆதர்ஷ் குமார், தனது குடும்பத்துடன் திருமலையில் சாமி தரிசனம் செய்தார்.

திருப்பதிக்கு உச்சநீதிமன்ற முதன்மை நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் வருகை தந்திருந்தார். அவர் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்வதற்காக திருமலை சென்றார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகிகள் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தேவஸ்தான அதிகாரிகள் தரிசன ஏற்பாடுகளை செய்து கொடுத்து, தீர்த்த பிரசாதங்களை வழங்கினர்.