நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தீர்வு காணவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

275

நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசு உடனடியாக தீர்வு காணவேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வு விவகாரத்துக்கு தீர்வு காணும் வகையில் தமிழகம் முழுவதும் திமுக நாளை அழைப்பு விடுத்துள்ள போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கும் என்று கூறினார். தமிழக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த விவகாரத்திற்கு மத்திய அரசு உடனடி தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்திய திருமாவளவன், குடியரசுத்தலைவராக பதவியேற்றுள்ள ராம்நாத் கோவிந்த் தமிழக அரசு நிறைவேற்றியுள்ள அவசர சட்டத்துக்கு ஒப்புதல் தரவேண்டும் என்று கூறினார்.