மத்திய அரசு இதுவரை எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

154

வறட்சி மற்றும் வர்தா புயல் நிவாரணம் தொடர்பாக, மத்திய அரசு இதுவரை எந்த நிவாரண உதவியும் வழங்கவில்லை என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழர்களுக்காக உயிர் தியாகம் செய்த முத்துக்குமாரின் 8 ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது சொந்த ஊரான திருச்செந்தூர் அருகே கொளுவைநல்லூரில், அவரது திருவுருவ சிலைக்கு விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் தமிழக அரசு சார்பில், வறட்சி நிவாரண நிதியாக ரூ.35 ஆயிரம் கோடி கேட்டு கோரிக்கை வைத்தபோதும் மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறினார்.