கல்லணையில் இருந்து இன்று தண்ணீர் திறப்பு : 14 லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி.

205

கல்லணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால், டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள கல்லணையில் இருந்து சம்பா சாகுபடி பாசனத்திற்காக 12 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. அணையில் இருந்து வெளிவரும் நீரில், காமராஜ், துரைக்கண்ணு உள்ளிட்ட 6 அமைச்சர்களும் மலர் தூவி வரவேற்றனர். இதனால், தஞ்சை, திருவாரூர், காரைக்கால், கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள சுமார் 14 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. நீர் திறப்புக்கு டெல்டா மாவட்ட விவசாயிகள் வரவேற்றுள்ளனர். கல்லணை நீர்திறப்பு நிகழ்ச்சியில், 5 மாவட்ட ஆட்சியர்களும், அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.