திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது..!

456

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.
முருகப் பெருமானின் ஆறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசித் திழவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா காலங்களில் தினம்தோறும் காலை மற்றும் மாலையில் சுவாமி வீதி உலா நடைபெறுவது வழக்கம். அதன்படி முதல் நாளான நேற்று சுவாமி வீதி உலா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர்.