திருச்செந்தூர் அருகே நடைபெற்ற சட்டசேவை முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் 400 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன..!

334

திருச்செந்தூர் அருகே நடைபெற்ற சட்ட சேவை முகாமில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் 400 பேருக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே ஆத்தூரில் தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் திருச்செந்தூர் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில், புதிய வடிவிலான சட்ட சேவை முகாம் நடைபெற்றது. முதன்மை மாவட்ட நீதிபதி சாருஹாசினி தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், பொதுமக்கள் மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர்களிடமிருந்து பல்வேறு கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் 400 பேருக்கு தொழிலாளர் நல வாரிய அட்டை, 10 பேருக்கு விபத்து காப்பீட்டு திட்டத்தில் நிதியுதவி என பல்வேறு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணையக்குழு செயலாளர் சாமுவேல் பெஞ்சமின் உள்பட அரசு அதிகாரிகள் பலரும் இந்த முகாமில் கலந்து கொண்டனர்.