கார் கவிழ்ந்த விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு..!

199

திருச்செந்தூர் அருகே கார் கவிழ்ந்த விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

திருச்செந்தூர் அருகே ஆழ்வார்திரு நகரியில் பால் ஐசக் என்பவர் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்த போது எதிர் பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த கார் சாலையில் கவிழ்ந்தது. இதில் பலத்த காயமடந்த பால் ஐசக் என்பவர் சம்பவ இடத்திலையே உயிரிழந்தார். உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளர் ஐசக், வீரப்பன் தேடுதல் வேட்டைக் குழுவுடன் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது