கேரள மாநிலம் திருச்சூர் பூரம் திருவிழாவில் நிகழ்த்தப்பட்ட கண்கவர் வானவேடிக்கையை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.

171

கேரள மாநிலம் திருச்சூர் பூரம் திருவிழாவில் நிகழ்த்தப்பட்ட கண்கவர் வானவேடிக்கையை ஏராளமானோர் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் பூரம் திருவிழா கடந்த வாரம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த திருவிழாவைக் காண பல்வேறு மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் அங்கு வருவது வழக்கம். திருவிழாவின் முக்கிய நிகழ்வான யானை அணிவகுப்பு நேற்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாலையில், வானவேடிக்கை போட்டி நடத்தப்பட்டது. இரவை பகலாக்கும் விதமாக, கண்ணை கவரும் வகையில் நிகழ்த்தப்பட்ட வானவேடிக்கையை, அங்கு கூடியிருந்த திரளான பக்தர்கள் கண்டு ரசித்தனர்.