தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம், சரத்குமார் வரவேற்பு

112

தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளதைச் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வரவேற்றுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் தான் பல முறை வலியுறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

திருநெல்வேலி மாவட்டத்தை இரண்டாகப் பிரித்துத் தென்காசியைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் எனச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.

காஞ்சிபுரம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்துச் செங்கல்பட்டைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அறிவித்துள்ளதற்கும் சரத்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.