தென்காசி அருகே கிராமத்தின் பெயரை மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேறி சென்றனர்.

301

தென்காசி அருகே கிராமத்தின் பெயரை மாற்றம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அக்கிராம மக்கள் ஊரைவிட்டு வெளியேறி சென்றனர்.
நெல்லை மாவட்டம், தென்காசி அடுத்த பாவூர்சத்திரம் அருகே உள்ளது ஆவுடையானூர் பஞ்சாயத்து. இந்த பஞ்சாயத்தின்கீழ் 15 கிராமங்கள் உள்ளன. அதில் சந்தனக்குமார்பட்டி என்ற கிராமத்தில் உள்ள பல பகுதிகள் ஏற்கெனவே “மாடியனூர்” என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது சந்தனக்குமார்பட்டி கிராமத்தின் பெயரையே மாற்றம் செய்து, பஞ்சாயத்துக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக அப்பகுதி மக்களுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து, பஞ்சாயத்து நிர்வாகத்தை கண்டிக்கும் விதமாக, ஊரைவிட்டு வெளியேறிய அக்கிராம மக்கள், ஊருக்கு வெளியே உள்ள விளைநிலத்தில் குடியேறினர். வட்டார வளர்ச்சி அலுவலர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ரத்து செய்து, அதனை எழுத்து பூர்வமாக எழுதி கொடுத்தால் ஒழிய, தங்களது போராட்டத்தை திரும்ப பெற மாட்டோம் எனவும் சந்தனக்குமார் பட்டி கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.