தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு பள்ளி மாணவர் விடுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

163

தூத்துக்குடி, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு பள்ளி மாணவர் விடுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.
சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் பெஞ்சமின், ராஜலட்சுமி, வளர்மதி, தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, தூத்துக்குடி, தேனி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு பள்ளி மற்றும் கலை கல்லூரி மாணவர்களுக்கு ஐந்து கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள தங்கும் விடுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதேபோன்று, திண்டுக்கல், காஞ்சிபுரம், அரியலூர் மாவட்டங்களில் மூன்று கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள சார் பதிவாளர் அலுவலக கட்டடங்களையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.