பால் வியாபாரி வீட்டின் பூட்டை மேற்கூரையை பிரித்து கொள்ளை

92

போடி அருகே பால் வியாபாரி வீட்டின் மேற்கூரையை பிரித்து 50 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தேனி மாவட்டம் போடி அருகே விநாயகர் கோயில் தெருவை சேர்ந்தவர் குருநாதன். பால் வியாபாரம் செய்து வரும் இவர், தனது தாயின் திதிக்காக குடும்பத்துடன் ராமேஸ்வரம் சென்றுள்ளார். பின்னர் வீடு திரும்பிய அவர், வீட்டின் மேற்கூரை பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்ததில், பீரோவில் இருந்த 50 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கொள்ளை போனது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டதையடுத்து, விரைந்து வந்த போலீசார் மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களின் உதவியுடன் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.