நிலச்சரிவு சரிசெய்யப்பட்டு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் : துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்

335

தேனி இரைச்சல் பாலம் அருகே ஏற்பட்டுள்ள நிலச்சரிவு சரிசெய்யப்பட்டு போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தேனி மாவட்டத்தில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்ட அவர், மாவட்ட அதிமுக நிர்வாகிகள் சார்பில் சேகரிக்கப்பட்ட நிவாரணப் பொருட்களை கேரளாவிற்கு அனுப்பிவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், தமிழக கரையோர பகுதிகளில் வெள்ள பாதிப்புகள் ஏற்படாத வகையில் நீர் வெளியேற்றம் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவித்தார்.

முல்லை பெரியாறு அணையில் இருந்து மிகுதியான நீர் இடுக்கி மாவட்டத்திற்கு அனுப்பப்படுவதாக குறிப்பிட்டார். வைகை அணையில் இருந்து அனைத்து கால்வாய்களுக்கும் தண்ணீர் திறந்துவிடப்படுவதாக கூறிய அவர், இரைச்சல் பாலம் அருகே ஏற்பட்டுள்ள நிலச்சரிவு சரிசெய்யப்பட்டு, அவ்வழியே போக்குவரத்து விரைவில் தொடங்கப்படும் என உறுதி அளித்தார்.