தேனியில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

292

தேனியில் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக அதிமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்
சென்னையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த பின்னர் செய்திளார்களை சந்தித்து முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேட்டியளித்தார். அப்போது கட்சியின் தலைமை தன்னை நிர்பந்தப்படுத்தியதால் தான், ராஜினாமா செய்ததாக கூறினார். இதற்கு ஆதரவு தெரிவித்து தேனி மாவட்டம் போடி தேவர் சிலை அருகே ஏராளமான அதிமுகவினர் குவிந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், மக்கள் விரும்பினால் மீண்டும் முதலமைச்சராக பொறுப்பேர்பேன் என்று ஓ.பன்னீர் செல்வம் அறிவித்ததையடுத்து தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுகவினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் தங்களது உற்சாகத்தை வெளிப்படுத்தினர். இதையடுத்து பெரியகுளம் நகர்பகுதியில் வைக்கப்பட்டிருந்த சசிகலாவின் பேனர்களை கிழித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.