தேனியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், 50ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் பயிர்கள் நிலத்தில் சாய்ந்து நாசமடைந்தன.

250

தேனியில் சூறாவளி காற்றுடன் பெய்த கனமழையால், 50ஏக்கருக்கும் மேற்பட்ட நெல் பயிர்கள் நிலத்தில் சாய்ந்து நாசமடைந்தன.
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகில் ஜெயமங்கலம், மேல்மங்கலம், சில்வார்பட்டி, வடுகபட்டி உள்ளிட்ட பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெற்றுவருகிறது. இந்த நிலையில், பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக கன மழை பெய்தது. இதனால் இன்னும் சில நாட்களில் அறுவடையாகும் 50 ஏக்கருக்கும் மேற்பட்ட நெல்பயிர்கள் நிலத்தில் சாய்ந்து நாசமடைந்தன. ஏக்கர் ஒன்றிற்கு 20 ஆயிரம் முதல் செலவு செய்துள்ள நிலையில், மழையினால் நெல்பயிர்கள் சேதமடைந்துள்ளது மிகுந்த கவலை அளிப்பதாக அப்பகுதி விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.