நெல்லை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 65 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

224

நெல்லை மாவட்டம் தியாகராஜநகர் பகுதியில் வசிப்பவர் சுரேஷ் நம்பி. தனியார் ஏஜென்சி உரிமையாளரான இவரும், இவரது மனைவியும் வெளியூர் சென்றிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட கொள்ளையர்கள், வீட்டின் பூட்டை உடைத்து, உள்ளே சென்று பீரோவில் தேடி உள்ளனர். நகை, பணம் இல்லாததைக் கண்டு, வீடு முழுவதும் தேடி, சமையல் அறையில் ஒரு அட்டை பெட்டியில் ஒளித்து வைத்திருந்த 65 சவரன் நகை மற்றும் 32ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணத்தையும் திருடியுள்ளனர். அத்துடன் வீட்டில் இருந்த தலையணை, ஜமுக்காளத்தை விரித்து படுத்து உறங்கி சென்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கொள்ளையர்கள் மிகவும் நிதானமாக செயல்பட்டு திருடிச் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.
சம்பவ இடத்திற்கு சென்ற மாநகர காவல்துறை ஆணைர் திருஞானம், துணை ஆணையர் பிரதீப் குமார் மற்றும் தடயவியல் நிபுணர்கள், ஆய்வு செய்து தடயங்களை சேகரித்தனர். கொள்ளை சம்பவம் தொடர்பாக பாளையங்கோட்டை குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்