கிருஷ்ணகிரி அருகே உள்ள மாரியம்மன் கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

276

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள மாரியம்மன் கோயிலில் கடந்த வருடம் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து தினமும் காலை, மாலை இருவேளைகளில் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கோயில் கதவின் பூட்டை உடைத்து, உள்ளே சென்ற கொள்ளையர்கள் அம்மன் கழுத்தில் இருந்த தாலி மற்றும் பீரோவில் இருந்த 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர்.