வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை, 1 லட்சம் ரூபாய் கொள்ளை..!

101

பெரம்பூர் அருகே, வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் மற்றும் 1 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னை பெரம்பூர் அருகே உள்ள ஜி.கே.எம். காலனியை சேர்ந்த பாண்டியன் என்பவர் தன் மனைவியுடன் வசித்து வருகிறார். கீழ்தளத்தில் உள்ள வீட்டை பூட்டி விட்டு முதல் தளத்தில் உள்ள அறையில் உறங்க சென்றனர். காலையில் கீழே உள்ள வீட்டை திறக்க வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு பாண்டியன் அதிர்ச்சியடைந்தார்.

வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பீரோவிலிருந்த 30 சவரன் தங்க நகை மற்றும், 1 லட்சம் ரூபாய் ரொக்கம் கொள்ளை போனது தெரியவந்தது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.