கோவை கல்யாண் ஜூவல்லரிக்கு சொந்தமான நகைகள் கொள்ளை | 8 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை

124

கோவையில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்த கும்பலை 8 தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.

கேரள மாநிலம் திருச்சூரில் உள்ள கல்யாண் ஜூவல்லரியிருந்து, கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள கல்யாண் ஜூவல்லரிக்கு தங்கம் மற்றும் வெள்ளி பொருட்களை பணியாளர்கள் கொண்டு வருவது வழக்கம். நேற்று 380 சவரன் தங்க நகைகளையும், வெள்ளி பொருட்களையும் எடுத்துக்கொண்டு பணியாளர்கள் காரில் வந்ததை மர்ம நபர்கள் நோட்டமிட்டனர். காக்காசாவடி அருகே கார் வந்தபோது, பின்னால் வந்த மற்றொரு கார் மோதியது.

அதிலிருந்த 10 பேர் கொண்ட கும்பல் இறங்கி வண்டியின் கண்ணாடிகளை உடைத்ததுடன், ஊழியர்களை தாக்கிவிட்டு தங்க நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு காரில் தப்பிச் சென்றது. இதன் மதிப்பு ஒரு கோடி ரூபாய் என கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இதுகுறித்து விசாரண நடத்தி வருகின்றனர். இக்கொள்ளை சம்பவம் குறித்து 8 தனிப்படைகளை அமைத்து சிசிடிவி மூலம் கொள்ளையர்களை தேடி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.