வீட்டில் புதைத்து வைத்திருந்த 150 சவரன் நகை பறிமுதல் செய்த போலீசார்..!

780

உல்லாச வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பல வீடுகளில் கொள்ளையடித்த பலே திருடனை, சென்னையில் போலீசார் கைது செய்தனர். அவனிடம் இருந்து 150 நகை பறிமுதல் செய்யப்பட்டது.

சென்னையை அடுத்த செங்குன்றம் பகுதியில் அனுப்குமார் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறான். காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை பகுதிகளில் உள்ள வீடுகளை நோட்டமிட்டு, நகைகளை கொள்ளையடித்து உல்லாசமாக வாழ்ந்துள்ளான். பலே திருடனை பிடிக்க, சிசிடிவி கேமரா மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இந்தநிலையில், வேளச்சேரியில் ஏழுமலை என்பவரிடம் கத்தியை காட்டி மிரட்டி 4 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து செல்லும்போது அனுப்குமார் சிக்கிகொண்டார். அவனை உடனடியான கைது செய்து விசாரணை மேற்கொண்டதில், வீட்டில் 150 சவரன் நகை புதைத்து வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார். அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அனுப்குமாரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.