செல்போன் கடையின் ஓட்டை பிரித்து கொள்ளை..!

300

மணச்சநல்லூர் அருகே செல்போன் கடையின் ஓட்டை பிரித்து, ஒரு லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் நொச்சியத்தை அடுத்த இந்திரா காலனியில் செல்போன் கடை நடத்தி வருபவர் லிங்கபிரபு. இவர் நேற்று வழக்கம்போல் கடையை பூட்டிவிட்டு சென்றுள்ளார். நள்ளிரவில் கடையின் மேற்கூரை ஓட்டை பிரித்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் செல்போன் மற்றும் உதிரிபாகங்களை கொள்ளை அடித்து சென்றனர். அந்த வழியாக வந்தவர்கள், கடையில் இருந்து மூட்டையுடன் கொள்ளையர்கள் தப்பி ஓடுவதை கண்டு துரத்தினர். இதனால், கொள்ளை அடிக்கப்பட்ட பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை அங்கேயே விட்டுவிட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர். அந்த வாகனத்தை பறிமுதல் செய்த போலீசார், கொள்ளையர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.