செங்கல்பட்டில் இருவேறு வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளை..!

157

செங்கல்பட்டில் இருவேறு வீடுகளின் பூட்டை உடைத்து 25 சவரன் நகை கொள்ளை அடிக்கப் பட்டிருக்கும் சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

செங்கல்பட்டு மகாலட்சுமி நகரை சேர்ந்த ராமலிங்கம் வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு தனது கடைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் மீண்டும் மதியம் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப் பட்டிருப்பதை கண்டு திடுக்கிட்டார். இதனையடுத்து உள்ளே சென்று பார்த்ததில் பீரோவிலிருந்த 20 சவரன் நகை, 50 ஆயிரம் ரொக்கம் கொள்ளை அடிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர், செங்கல்பட்டு தாலுக்கா காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதேபோல் சக்தி நகரில் குமார் என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் 5 சவரன் நகையை கொள்ளை அடித்து சென்றுள்ளனர். ஒரே நாளில் ஒரே பானியில் இருவேறு வீடுகளில் நடந்திருக்கும் கொள்ளை சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.