போலீசாரிடம் கைவரிசை காட்டிய பலே திருடன்..!

174

காவல்துறையினரின் அலட்சிப்போக்கால் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருச்சக்கர வாகனம் கொள்ளையடிக்கப்பட்ட வீடியோ காட்சிகள், இணையத்தில் வைரலாகியுள்ளது.

கரூர் காவல்நிலையத்திற்கு, திண்டுக்கல் மாவட்டம் லந்தக் கோட்டையை சேர்ந்த விசுவநாதன் என்பவரை, போலீசார் சந்தேகந்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து வந்தனர். விசாரணைக்கு பின்னர், அவரை போலீசார் அனுப்பி விட்டனர். வெளியே சென்ற விசுவநாதன் காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த, அழகுராமன் என்ற எஸ்.ஐ பயன்படுத்தி வந்த பைக்கை திருடிச் சென்று விட்டான். இதனிடையே பைக் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார், சிசிடிவி கேமரா பதிவுகளை சோதித்து பார்த்தனர். அப்போது விசாரணைக்கு வந்த விசுவநாதன், பைக்கை திருடி சென்றது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசாரின் பைக்கை திருடிய விசுவநாதனை, போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். பொதுமக்களின் திருட்டுப்போன பொருட்களை கண்டுப்பிடித்து தரக்கோரி, மக்கள் காவல்நிலையத்தை தேடி வரும்நிலையில், போலீசாரின் பைக் காவல்நிலையத்திலேயே திருடப்பட்ட சம்பவம் பரலது விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. காவல் நிலையத்தில் அரங்கேறிய இந்த திருட்டுச் சம்பவ காட்சிகள், இணையத்தில் வைரலாகி உள்ளது.