தீவிரவாதம் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர்ந்து மேற்கொள்ள இந்தியாவும், சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன.

223

தீவிரவாதம் தொடர்பான பேச்சுவார்த்தையை தொடர்ந்து மேற்கொள்ள இந்தியாவும், சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன.
இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியா மற்றும் சீனா தேசியப்பாதுகாப்பு ஆலோசகர் இடையிலான பேச்சுவார்த்தை ஐதராபாத்தில் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது. இதில், பயங்கரவாதம், மண்டல மற்றும் சர்வதேசப் பிரச்னைகள், இருதரப்புப் பொருளாதார உறவு உள்ளிட்ட பல்வேறு விவாகரங்கள் விவாதிக்கப்பட்டன. இந்தியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன அதிபர் ஜீ ஜின்பிங் இந்தியா வந்தது, ஜி-20 மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி சீனா சென்றது போன்ற காரணங்களால் இருநாட்டு உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும், தீவிரவாதம் தொடர்பான பேச்சுவார்த்தையை இருநாடுகளும் தொடர்ந்து மேற்கொள்ள ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.