உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே மத்திய அரசின் நடவடிக்கை அமையும் !

134

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே மத்திய அரசின் நடவடிக்கை அமையும் என மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் அனில் மாதவ் தவே தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜல்லிக்கட்டு நடத்துவது தொடர்பான வழக்கு உச்சநீதின்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், அது தொடர்பாக அவசர சட்டம் கொண்டு வர முடியாது என தெரிவித்தார்.
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை பொறுத்தே மத்திய அரசின் நடவடிக்கை அமையும் என்று கூறிய அவர்,மக்களின் உணர்வுக்கு ஏற்ப தீர்ப்பு அமையும் என நம்புவதாக தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மக்களைப் போலவே தனது கரங்களும் கட்டப்பட்டுள்ளதாக தெரிவித்த அனில் மாதவ் தவே, காட்சிப்படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளைகள் சேர்க்கப்பட்ட பின்பே ஜல்லிக்கட்டு போட்டிக்கு பிரச்சனை ஏற்பட்டதாக விளக்கம் அளித்தார்.