காஞ்சிபுரம் அருகே திருநங்கைகள் குடியிருப்பில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதையடுத்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

215

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே வளத்தோட்டம் பகுதியில் திருநங்கைகள் குடியிருப்பு உள்ளது. இதில் நீலா என்ற திருநங்கையின் வீடு தீ பற்றி எரிந்தது. இதில் வீட்டில் இருந்த பொருட்கள் முழுவதுமாக எரிந்து நாசமாகின. இதனையடுத்து, நீலாவின் வீட்டிற்கு சமூக விரோதிகள் தீ வைத்ததாக, அருகில் குடியிருக்கும் வச்சலா என்ற திருநங்கை, மாவட்ட காவல்துறை காண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார். இதன் அடிப்படையில் குடிசைக்கு தீ வைக்கப்பட்டதா? அல்லது மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.