சிறுமி மற்றும் தாயை கொன்ற கொடூரன் தலைமறைவு | மும்பையில் கைது செய்து சென்னை கொண்டு வர போலீசார் தீவிரம்..!

726

சிறுமி மற்றும் தாயை கொன்ற வழக்கில் மும்பையில் கைது செய்யப்பட்ட தஷ்வந்த் இன்று சென்னைக்கு அழைத்து வர போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை முகலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7 வயது சிறுமி ஹாசினி வசித்து வந்துள்ளார். அதே குடியிருப்பில் இருக்கும் தஷ்வந்த், அந்த சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்து, எரித்து கொலை செய்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளிவந்த தஷ்வந்த், 25 சவரன் நகைக்காக தாய் சரளாவை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்து விட்டு, நகையுடன் தலைமறைவானார். இதனையடுத்து தஷ்வந்த்தை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டனர். 5 நாட்களுக்கு பிறகு, தஷ்வந்தை தனிப்படை போலீசார் மும்பையில் கைது செய்தனர். அவரை சென்னைக்கு அழைத்து வரும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.