ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம் , அனுமதி வழங்கியே தீரவேண்டும் : தருண்விஜய் வலியுறுத்தல்

215

ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம் என ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழில் முன்னாள் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் வீர முழக்கமிட்டார்.
டெல்லியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருக்குறளை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்ப்பது, திருக்குறளை பரப்புவது, இந்தியாவின் பல இடங்களில் அய்யன் திருவள்ளுவர் சிலையை நிறுவுவது என தமிழர்களுக்கு மிகவும் பரிச்சயமான பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தருண் விஜய் இந்த போராட்டத்தில் ஈடுபட்டார். டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பல்வேறுகல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கைகளில்மெழுகுவர்த்தி ஏந்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கோஷங்கள் எழுப்பினர். ஜல்லிக்கட்டு தமிழர்களின் அடையாளம் என்றும், ஜல்லிக்கட்டு இந்தியாவின் அதிகாரம் என்றும் அவர் தமிழல் வீரமுழக்கமிட்டார். அத்துடன், ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கியே தீர வேண்டும் என்றும் தருண்விஜய் அப்போது வலியுறுத்தினார்.