தார் கொள்முதலில் ரூ. 1000 கோடி ஊழல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு!

279

தார் கொள்முதல் செய்யப்பட்டதில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றதாகக்கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பாலாஜி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு
தாக்கல் செய்துள்ளார். இதில், ஒருங்கிணைந்த சாலை உள்கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 3 ஆயிரம் கோடி ரூபாய் நிதியுதவியை தமிழக அரசுக்கு மத்திய அரசு
வழங்குவதாக கூறப்பட்டுள்ளது. இதில், தார் கொள்முதல் செய்வதற்கே
அதிக அளவு செலவிடப்படுவதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு தார் கொள்முதல் செய்யப்பட்டதில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இதற்கு நெடுஞ்சாலை அதிகாரிகள் உடந்தையாக இருந்துள்ளதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அமர்வு முன்னிலையில் நாளை விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.