தன்சானியா நாட்டின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

225

தன்சானியா நாட்டின் வடமேற்கு பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் 13 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
தான்சானியாவின் வடமேற்கு பகுதியான புகோபா பகுதியில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5 புள்ளி 7 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் புகோபா பகுதியில் உள்ள வீடுகள், கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதனால் வீடுகளிலும், கட்டடங்களிலும் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்குண்டனர். இந்த இடிபாடுகளில் சிக்கி பொதுமக்கள் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலநடுக்கத்தின் காரணமாக ருவாண்டா, புருண்டி, உகாண்டா மற்றும் கென்யா உள்ளிட்ட பகதிகளில் நில அதிர்வு உணரப்பட்டது.