தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது

228

தஞ்சை, அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் ஆகிய இடைத்தேர்தல் தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் இன்றுடன் நிறைவு பெற்றது.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு ஆகிய 4 தொகுதிகளில் வரும் 19 தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் கடந்த 26 ஆம் தேதி தொடங்கிய நிலையில், நவம்பர் 2 ஆம் தேதிவரை வேட்பு மனுத்தாக்கல் செய்யலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்தநிலையில், தஞ்சாவூர், அரவக்குறிச்சி, மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய மூன்று தொகுதிகளுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைந்தது. இதேபோன்று, புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதிக்கான வேட்பு மனுத்தாக்கலும் இன்றுடன் நிறைவு பெற்றது. வேட்பு மனுக்கள் நாளை பரிசீலிக்கப்படும். மனுக்களை திரும்ப பெற 5ம் தேதி கடைசி நாள். அன்றுமாலை இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். தமிழகத்தில் 3 தொகுதிகளிலும் அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, மற்றும் பாஜக கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்துள்ளதால் 5 முனைப் போட்டி நிலவுகிறது.