4 வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாத போது, 8 வழிச்சாலை எதற்கு என சீமான் கேள்வி..!

178

சேலத்தில் 4 வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாத போது, 8 வழிச்சாலை எதற்கு என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சாவூரில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும், காவிரி உரிமை மீட்புக்குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசனை சீமான் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், நமது மண்ணின் வளங்களை ஏற்றுமதி செய்யும் பாரத்மாலா திட்டங்கள் குறித்து பேசினால் தேசத்துரோகி என்று கூறி கைது செய்ய முயல்வதாக குற்றச்சாட்டினார். தண்ணீர் கேட்டால் சாலை தருவதாக சொல்கிறார்கள் என குறிப்பிட்ட சீமான், சேலத்தில் 4 வழிச்சாலையில் போக்குவரத்து நெரிசல் இல்லாத போது, 8 வழிச்சாலை எதற்கு என சீமான் கேள்வி எழுப்பினார்.