தஞ்சை அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து | ஓட்டுனர்கள் உட்பட நான்கு பேர் உயிரிழப்பு …!

701

தஞ்சை அருகே இரண்டு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், ஓட்டுனர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். 20க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர்.
அம்மாபேட்டையை அடுத்த பல்லவராயன்பேட்டை பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்தது. தஞ்சையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சென்ற அரசுப் பேருந்தும், நாகையில் இருந்து திருச்சி சென்ற தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த விபத்தில் ஓட்டுனர்கள் முருகேசன், ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தனியார் பேருந்தில் பயணித்த இரண்டு பேர் விபத்தில் பலியாகினர். பலத்த காயம் அடைந்த 20க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தால், அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.