முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஓய்வு தேவை என்றும், தனி அறையில் அவர் ஓய்வெடுத்த பின், மருத்துவமனையில் இருந்து வீடு திரும்புவது பற்றிய அறிவிப்பு வெளிவரும் என அதிமுக அமைப்பு செயலாளர் பொன்னையன் தெரிவித்துள்ளார்.

464

சென்னை வானகரத்தில் நடைபெற்ற தனியார் மீன் மார்க்கெட் திறப்பு விழாவில் பங்கேற்றபின், செய்தியாளர்களிடம் பேசிய பொன்னையன், அனைத்து மதத்தினை சேர்ந்த மக்களின் பிரார்த்தனையால் முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெற்று, தற்போது அப்போலோ மருத்துவமனையில் தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளதாக கூறினார். முதலமைச்சருக்கு ஓய்வு தேவை என்று கூறிய பொன்னையன், ஓய்விற்கு பின்னர் அவர் வீடு திரும்பும் அறிவிப்பு வெளி வரும் என்றும் தெரிவித்தார். தஞ்சாவூர் உள்ளிட்ட 4 தொகுதி தேர்தலிலும் அதிமுக அமோக வெற்றி பெறும் என்று கூறிய பொன்னையன், வெற்றிக்கனியை முதலமைச்சருக்கு சமர்ப்பிப்போம் என்றும் தெரிவித்துள்ளார்.