தனுஷ்கோடி அருகே தங்கச்சிமடம் மீனவர்கள் 5 பேர் கைது !

444

தனுஷ்கோடி அருகே எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி தங்கச்சிமடம் மீனவர்கள் ஐந்து பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
தனுஷ்கோடிக்கும் தலைமன்னாருக்கும் இடையே இன்று அதிகாலை தங்கச்சிமடத்தைச் சேர்ந்த மீனவர்கள் நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்றுள்ளனர்.அப்போது அவ்வழியாக, ரோந்துச்சென்ற இலங்கை கடற்படையினர், எல்லைத்தாண்டி மீன்பிடித்ததாகக்கூறி, அபிசேக், ஆரோக்கியம், சந்திய மிக்சன், ராஜகுணசேகரன், அந்தோணி ஆகிய ஐந்து மீனவர்களை கைது செய்ததோடு, அவர்களுடைய நாட்டுப்படகையும் பறிமுதல் செய்தனர். இதனையடுத்து, மீனவர்கள் 5 பேரையும், மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச்சென்று, இலங்கை கடற்படையினர் விசாரணை நடத்தி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.