எதிர்க்கட்சிகள் மக்களை பீதியடையச் செய்வதாக குற்றச்சாட்டு-அமைச்சர் தங்கமணி!

307

எதிர்கட்சிகள் தான் டெங்கு காய்ச்சல் விவகாரத்தை பெரிதுப்படுத்தி மக்களை பீதியடைய செய்வதாக, அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டி உள்ளார்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத்துறை சார்பில் பேருந்து நிலையம் அருகே நிலவேம்பு கஷாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி பொதுமக்களுக்கு நிலவேம்பு கஷாயத்தை வழங்கினார்.
நிகழ்ச்சியில் பேசிய தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடைபெற்று வருவதாகவும், நாமக்கலில் டெங்கு அறிகுறியுள்ள 47 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். எதிர்கட்சிகள் டெங்கு காய்ச்சல் விவகாரத்தை பெரிதுப்படுத்தி மக்களை பீதியடைய செய்வதாக அவர் கண்டனம் தெரிவித்தார்.