3,000 மின்கட்டண வசூல் மையங்களில் ஸ்வைப்பிங் மெஷின் சேவை-தங்கமணி, மின்சாரத்துறை அமைச்சர்!

255

தமிழகம் முழுவதும் 3 ஆயிரம் மின்கட்டண வசூல் மையங்களில் ஸ்வைப்பிங் மெஷின் சேவை தொடங்கப்படும் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்
சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மின்கட்டண வசூல் மையங்களில் ஸ்வைப்பிங் மெஷின் சேவையை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் உதனபள்ளியில் நிறுவப்படவுள்ள தொழிற்பூங்காவுக்கு தடையிலா மின்சாரம் வழங்குவதற்கான ஜி.எம்.ஆர். கிருஷ்ணகிரி நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தானது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் தங்கமணி, மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கனமழையின் பொழுது பாதுகாப்பு கருதி மின்சாரம் துண்டிக்கும்போது, அதை மின்தடை என தவறாக எடுத்துக்கொள்ள கூடாது எனவும் கேட்டுக் கொண்டார்.