பொய் புகார்களைக் கூறி, அரசியல் செய்து வரும் ஸ்டாலின் – அமைச்சர் தங்கமணி

226

தொடர்ந்து பொய்யான புகார்களை கூறிவந்தால், நீதிமன்றம் செல்வோம் என ஸ்டாலினுக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின்சாரத்துறை தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொய் புகார்களை வைத்து ஸ்டாலின் அரசியல் செய்து வருவதாகக் கூறினார். முதலில் உண்மை தன்மை அறிந்து எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின், ஆளுங்கட்சி மீது குற்றம் சாட்ட வேண்டும் என்று கூறிய அமைச்சர் தங்கமணி, மக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்படுத்தவே, இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுக்களை ஸ்டாலின் கூறி வருவதாக தெரிவித்தார். தொடர்ச்சியாக, இது போன்ற புகார்களை முன்வைத்தால், நீதிமன்றத்தை நாடுவதை தவிர வேறுவழியில்லை என்றும் அவர் கூறினார்.