பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் : உச்சநீதிமன்ற ஆணை நகல் கிடைத்த பிறகு முடிவு

164

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து உச்சநீதிமன்ற ஆணையின் நகல் கிடைத்த பிறகு முதலமைச்சர் உரிய முடிவை எடுப்பார் என்று மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் உள்ள அரியூநாடு தெம்பளத்தில் தமிழக அரசு சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கமணி பங்கேற்று ஆயிரத்து 168 பேருக்கு நலத்திட்டங்களை வழங்கினார். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2020ஆம் ஆண்டுக்குள் மத்திய அரசு அறிவித்த ஒன்றரை லட்சம் ஸ்மார்ட் மீட்டர்கள் வாங்கப்படும் என்றார். இதனிடையே பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பது குறித்து உச்சநீதிமன்ற ஆணையின் நகல் கிடைத்த பிறகு முதலமைச்சர் உரிய முடிவை எடுப்பார் என அமைச்சர் தங்கமணி கூறினார்.