திரையரங்குகளில் வெளியான 5 நாட்களில் 300 கோடிக்கு மேல் வசூலித்து டங்கல் படம் சாதனை படைத்துள்ளது.

224

திரையரங்குகளில் வெளியான 5 நாட்களில் 300 கோடிக்கு மேல் வசூலித்து டங்கல் படம் சாதனை படைத்துள்ளது.
அமீர் கான், சாக்‌ஷி தன்வார் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் உருவாகியுள்ள டங்கல் படம், கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. இந்தியாவில் 4 ஆயிரத்து 300 திரையரங்குகளில் இந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியாகியுள்ள டங்கல், வெளிநாடுகளில் 1000 திரையரங்குகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் 5 நாட்களில் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து மகத்தான சாதனை புரிந்துள்ளது. அதன் அடிப்படையில் வரும் வாரங்களில் பல சாதனைகளை டங்கல் படம் நிகழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.