மோடி அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் – அமைச்சர் தங்கபாலு

205

மத்தியில் ஆளும் பா.ஜக. அரசை வீழ்த்த காங்கிரஸ் கூட்டணி ஒன்றிணைந்து செயல்படும் என முன்னாள் அமைச்சர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் செல்லக்குமார், முன்னாள் மத்திய அமைச்சர் கேவி தங்கபாலு கலந்து கொண்டனர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கபாலு, பாஜக தலைமையிலான மத்திய அரசை வீழ்த்துவதற்கு பல்வேறு வியூகங்கள் வகுக்கப்பட்டு வருவதாக தெரிவினார்.